2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
weekly rasipalan
வார ராசிபலன்
Published on

தனுசு

தடை பட்ட முயற்சிகள் துரிதமாகும் வாரம்.ராசி அதிபதி குருவுடன் பாக்கியா திபதி சூரியன் சேர்வது சிவராஜ யோகமாகும். மனதில் மகிழ்ச்சி உண்டா கும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். வீண் அலைச்சல், துக்கம் விலகும். குடும்பத்தில் சில பிரச்சி னைகள் தடைகள் வந்தாலும் குருப் பார்வையால் சுமூகமாகும். அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். நல்ல தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் மிக மிக சாதகமான நன்மை கள் நடைபெறும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் அகலும். 14.7.2026 அன்று இரவு 6.49 மணி முதல் 16.7.2026 அன்று இரவு 7.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். நீங்கள் நல்லது சொன்னாலும் மற்ற வர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். பேச்சில் கவனம் தேவை.கோபத்தை கட்டுப்படுத்தவும். ஆடி மாத வெள்ளிக்கிழமையில் குல, இஷ்ட தெய்வத்தை வழிபட அற்புதங்கள் வந்து சேரும்.

மகரம்

நல்ல செய்தி தேடி வரும் வாரம். ராசிக்கு குரு பார்வை உள்ளதால் புத்திக் கூர்மை கூடும். புதிய சிந்தனைகள் உருவாகும். மனச்சுமை குறையும்.குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, உயர் கல்வி என சுப மங்களச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். கவுரவப் பதவிகள், அரசாங்கப் பதவிகள் கிடைக்கும். புகழ், அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். தன்னம்பிக்கை யால் காரியம் சாதிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை கவனமுடன் நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி அலைச்சலான பயணங்கள் செய்வீர்கள். 16.7.2026 அன்று இரவு 7.52 மணி முதல் 18.7.2026 அன்று இரவு 11.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது. எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.ஆடி மாத வெள்ளிக்கிழமையன்று லலிதா திரிசதி நாமாவளி படிக்கவும்.

கும்பம்

இன்னல்கள் முடிவுக்கு வரும் வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சனிக்கு குருவின் பார்வை உள்ளது. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமையும், உயர்வும் ஏற்படும். தாய்வழி உறவுகளின் உதவி கிடைக்கும். விருந்தினர் வருகையால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு, அவர்களின் திறமைக்கு வேலை கிடைக்கும். உங்களின் முயற்சியால் தொழிலில் உத்தியோகத்தில் சாதகமான பலன் உண்டாகும். கடன் தொல்லை அகலும். விற்பனையாகாமல் கிடந்த சொத்துக்கள் தற்போது விற்று முழுத் தொகையும் கைக்கு வந்து சேரும். புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். கையில் பணம் புரள்வதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். சுயஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து சுய தொழில் துவங்க வேண்டும். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடவும்.

மீனம்

தெய்வ அனுகூலம் உண்டாகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராஜ கிரகங்களான குருவும் சூரியனும் சேர்க்கை பெற்று உள்ளார்கள். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடை தாமதங்கள் அகலும் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து மருமகள், மருமகன் பேரன் பேத்தியை பார்ப்பீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும். கவுரவப் பதவி, கவுரவப் பட்டம் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகமாகும். புதிய ரத்த அணுக்கள் உற்பத்தியாகி நோய் எதிர்ப்பு சக்தி கூடும். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். ஆடம்பரச் செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க திட்டமிடுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பெருகும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவன், மனைவி மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு மனதில் நினைத்தது போன்ற சிறப்பான நல்ல வரன்கள் தேடி வரும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மஞ்சள் நிற ஆடை, பூக்கள் அணிவித்து வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com