

மனக் கவலைகள் அகலும் மாதம். ராசி அதிபதி செவ்வாய்க்கு லாபாதிபதி சனியின் பார்வை உள்ளது. இதனால் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். இந்த வாரத்தில் உலாவரும் கிரக நிலைகள் உங்களுக்கு நல்ல சுப யோகங்களை பெற்றுத் தரப்போகிறது. உங்களின் ஆற்றல், நேர்மறை எண்ணம் அதிகரிக்கும். மனக்கவலைகள் அகலும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், மனச் சங்கடங்கள் மறையும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும். தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். மனதில் எண்ணிய திட்டங்களை செயல்படுத்த ஏற்ற நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறவுகளிடம் அன்பு அதிகரிக்கும். சில சுப விரயங்கள் உண்டு. ஆன்மீக பணிகளில் மனம் ஈடுபடும். 23.7.2026 இரவு 7.01 முதல் 26.7.2026 இரவு 7.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம், நகை, விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருக்கவும். பணத்தை யாருக்கும் கடனாக தரவும், வாங்கவும் வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட்டு கடனாக பெற்றுத்தரும் பணம் திரும்ப வர வாய்ப்பு இல்லை. ஆடி மாத செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடும்.
திட்டமட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் கேது உடன் சேர்க்கை பெற்றுள்ளார். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். புதிய சொகுசு வாகனம் மற்றும் சொத்து வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மதத்தவரின் ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அனுகிரகமும் பக்க பலமாக இருக்கும். மனதில் உற்சாகமும் தெம்பும் பிறக்கும். இந்த ஜென்மத்தில் வாழ்க்கையில் நடைபெற வேண்டிய அனைத்து பாக்கிய பலன்களும் நடக்கும். குடும்பத்திலும் சமூகத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். உங்கள் செயல்பாடுகள் மூலம் நல்ல பெயர் எடுப்பீர்கள். மறைமுக பிரச்சினைகளால் ஏற்பட்ட மன வருத்தம் குறையும். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் மீண்டும் நடைபெறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. போட்டித் தேர்வில், பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. சமாளிக்க முடியாமல் இருந்த பிரச்சினைகளுக்கு இனி சுலபமாக தீர்வுகாண முடியும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.
பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி புதன் ராசியில் வக்கிரகதியில் சஞ்சரிக்கிறார். வார இறுதியில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். வெளிநாட்டு பயணம் நன்மை தரும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். மருத்துவச் செலவு குறையும். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு, வழக்கு, பேச்சு வார்த்தை இழுபறியாகும். மருமகன், மருமகள் பேரன், பேத்தி போன்ற புதிய உறவுகள் உருவாகும் காலம். குடும்பத்துடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். கோட்சார குருபகவான் தைரியம் தன்னம்பிக்கையை அதிகரிப்பார். தாய் மாமன் மற்றும் தாய் வழி உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். தசா புத்திகள் சாதகமாக இருந்தால் ராஜயோகத்திற்கும் இடமுண்டு. பேச்சை மூலதனமாகக் கொண்ட வர்கள், வங்கிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆடிட்டிங் துறையினர் மேன்மையான பலன்கள் பெறுவார்கள். அரசு, தனியார் பணியில் உள்ளவர்களுக்கு உபரி வருமானம் மகிழ்ச்சியைத் தரும். ஆடி வெள்ளிக்கிழமை மரிக்கொழுந்து மாலை அணிவித்து அம்மன் வழிபாடு செய்யவும்.
முத்தாய்பான முன்னேற்றங்கள் உண்டாகும் சாதகமான வாரம். ராசியில் சூரியன் குரு சேர்க்கை உள்ளது. இது சிவராஜ யோகமாகும். தொட்டது துலங்கும். உங்களது திட்டங்கள் செயல்பாடுகள், எண்ணங்கள் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டு. தொழில் லாபமும் ஏற்றமும் உறுதி. பங்கு சந்தையில் ஆர்வம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். கடனால் பாதித்த கவுரவம், மரியாதை குறைவு மறையும். வருமானம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், ஒப்பந்த தொழில் புரிபவர்கள் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பலன் உண்டு. வங்கி இருப்புகள் அதிகரிக்கும். சேமிப்புகள் உயரும். இலக்கை நிர்ணயித்து செயல்படுவது நல்லது. தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். தொழில் போட்டிகளை சமாளிக்கும் மன வலிமை அதிகரிக்கும். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிர பலமடைவார்கள். ஆடி மாதம் புனித நீர்நிலைகளில் நீராடவும்.