2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

சிலர் சிறு தொழில் புதியதாக கற்று அது சார்ந்த தொழில் ஆரம்பிக்கலாம்.
weekly rasipalan
வார ராசிபலன்
Published on

மேஷம்

முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். மேஷ ராசிக்கு கேந்திரம் திரிகோணம் பணபர ஸ்தானம் என முக்கிய அமைப்புகள் மிகச் சாதகமாக உள்ளது. கசந்த காலங்கள் இனி வசந்த காலமாக மாறப்போகிறது. இதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்த தடை தாமதங்கள் அனைத்தும் விலகி இன்பங்கள் கூடி வரும். சொந்த முயற்சியில் வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வீர்கள். முறையாக திட்டமிட்டு இந்த ஆடி மாதத்தில் செயல்பட்டால் எண்ணங்கள் கனவுகள் லட்சியங்கள் அனைத்தும் செயலாக்கம் பெறும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. அதிர்ஷ்டம் சார்ந்த வருமானம் எதிர் பார்க்கலாம் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வம் கூடும். அதிர்ஷ்ட பணம், பொருள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் இருந்த சிரமங்கள் குறையும். சிலர் சிறு தொழில் புதியதாக கற்று அது சார்ந்த தொழில் ஆரம்பிக்கலாம். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு செய்யவும்.

ரிஷபம்

செயல்கள் அனைத்தும் விருத்தியாகும் வாரம். ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய்க்கு சனியின் மூன்றாம் பார்வை உள்ளது. ஏற்கனவே துவங்கிய செயல்கள் இனிமேல் துவங்கப் போகும் செயல்களும் வெற்றியைத் தேடித் தரும். அறிவும் திறமையும் பளிச்சிடும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பேச்சாலும் செயலாற்றலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞானத் தன்மை அதிகரிக்கும். தான, தர்மம் உதவி செய்வதன் மூலம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கையில் பணம் தாராளமாக நடமாடும். சகோதரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சரியாகும். குடும்பத்தினருடன் பேசி திருமணத்தை முடிவு செய்யலாம். பிள்ளைகள் பற்றிய நல்ல செய்திகள் தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் சில சங்கடங்கள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாய் வழி, வீடு, வண்டி, நிலங்கள், கட்டிட வாடகை, கால்நடை சார்ந்த வருமானம் கிடைக்க பெறலாம். துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள்.ஆடி வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு செய்யவும்.

மிதுனம்

காரிய அனுகூலம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். தனஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் குரு சேர்க்கையால் சிவராஜ யோகம் ஏற்படுகிறது.சுறுசுறுப்பும் செயல்திறனும் கூடும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். இதனால் நல்ல வாய்ப்புகள் கை கூடி வரப்போகிறது. எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கும் தைரியம் அதிகரிக்கும். கடந்தகால உழைப்பிற்கான பலன் இப்பொழுது கை கொடுக்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் அதிகம் நடைபெறும். இதுவரை பட்ட சங்கடங்கள் முடிவிற்கு வரும். பணவரத்து திருப்தி தரும். நிதி நெருக்கடிகள் நீங்கும். சுபச்செலவுகள் அதிகமாகும். புதிய வீடு, மனை வாங்குவீர்கள். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். பிள்ளைகளால் பெற்றோருக்குப் பெருமை உண்டாகும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். உயர் கல்விக்கு விரும்பிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடி மாதப்பிறப்பு அன்று ஸ்ரீ மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.

கடகம்

நினைத்தது நிறைவேறும் வாரம். ராசியில் சூரியன் குரு சேர்க்கை உள்ளது.பாலிசி முதிர்வு தொகை, பூர்வீகச்சொத்து, பங்கு சந்தை முதலீடு என எதிர்பாராத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். லாட்டரி, பந்தயம், சூதாட்டம், புத்தி சார்ந்த, கற்ற கலை சார்ந்த வருமானம் உண்டு. சிலருக்கு பிள்ளைகள் மூலம் உபரி வருமானம் கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும். கடந்தகால நெருக்கடிகள் பிரச்சனைகள் குறையத் துவங்கும். எதிலும் வெற்றியே காண்பீர்கள். உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். வேலை இன்மையால் அவதிப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும்.பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும்.சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நோய் தொல்லை குறையும். ஆடி வெள்ளிக்கிழமை புனித நீர் நிலைகளில் நீராட உள்ளமும் உடலும் புத்துணர்வடையும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com