

திட்டமிடடு செயல்பட வேண்டிய காலம்.பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார்.இதனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. இது தனுசு ராசியினரின் வாழ்க்கையில் தடைபட்ட அனைத்து விதமான நல்ல பலன்களும் நடத்தும் அமைப்பாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகு வார்கள். மூத்த சகோதரம், சித்தப்பா, நண்பர்கள் மூலம் ஆதாயங்களும், உதவிகளும் தேடி வரும்.
குடும்ப உறுப்பினர்கள் ஆதரவுடன் புதிய தொழில் முயற்சியில் ஆர்வம் காட்டு வீர்கள். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். கடனாக கொடுத்து மாட்டிக்கொண்ட பணம் திரும்பக் கிடைக்கும். சுய பெருமை பேசி உங்கள் வளர்ச்சிக்கு நீங்களே தடை யாக இருக்கக்கூடாது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். காதல் திருமண முயற்சிகள் நிறைவேறும். தம்பதிகளிடம் ஏற்பட்ட மன பேதம் சீராகும். வைகாசி விசாகத்தன்று சந்தன அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.
மன நிறைவும், நிம்மதியும் உண்டாகும் வாரம். சுகஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார்.தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் விவேகமான சிந்தனை செய்து தொழிலை வளர்ப்பீர்கள். இது பொற்காலம் என்று சொல்லும் வகையில் உபரி வருமானம் உண்டாகும். கடன் பிரச்சிினைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களால் சந்தோஷம் ஏற்படும். சேமித்த பணத்திற்கு நகையாகவோ, இடமாகவோ வாங்குவீர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம் அதிகரிக்கும். பேச்சில் தெளிவு ஏற்படும். திருமணத்தடை விலகும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். சகோதரர்களால் வீண் விரயம் உண்டு.
சுப விரயங்கள் செய்ய உகந்த காலம். அடமானச் சொத்துக்கள் மீண்டு வரும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம். 25.5.2026 அன்று காலை 9.02 மணி வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் முன் கோபத்தில் பகைமை உருவாகும். இது வரை நீங்கள் கட்டி காப்பாற்றிய வீரம், விவேகம் மட்டுப்படும். பேசும் வார்த்தையில் கவனமும் நிதானமும் தேவை. வைகாசி விசாகத்தன்று பாலாபிஷேகம் செய்த முருகனை வழிபடவும்.
சகாயமான வாரம். முயற்சி ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார்.புதிய முயற்சிகள், சிந்தனைகள் வெற்றி தரும்.பணம் பல வழிகளில் வந்து சேரும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வராக்கடன்கள் வசூலாகும். வீடு, நிலம், வாகனம் வாங்குதல், கால்நடை வாங்குதல் ஆகியவை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்த பிரச்சிினைகள் குறையத் துவங்கும். அரசுத் துறையில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
விண்ணப்பித்த வீடு, வாகனக் கடன், தொழில் கடன் கிடைக்கும். வழக்குகளில் திருப்பம் உண்டாகும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். 25.5.2026 அன்று காலை 9.2 முதல் 27.5.2026 அன்று இரவு 7 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் சிறு பயம், அச்சம், சந்தேகம் ஏற்படும். வீண் செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.காது,மூக்கு, தொண்டை போன்ற உடல் உபாதைகள் சிரமம் தரும். வேண்டாத பிரச்சினைகளை யோசித்து மனக் குழப்பத்தை அதிகரிக்க கூடாது. வைகாசி விசாகத் தன்று இயன்ற தான தர்மங்கள் வழங்கவும்.
குலதெய்வ அனுகூலம் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சமடைய போகிறார். இது போன்ற உன்னதமான காலம் மீண்டும் 12 வருடம் கழித்து உண்டாகும். இது மீன ராசியினருக்கு ஜென்மச் சனியின் தாக்கத்தை குறைத்து மன நிம்மதியை அதிகரிக்கும். குல கவுரவம் உயரும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற முடியும். சிலர் பயன் படாத சொத்துக்களை விற்று லாபம் பார்க்கலாம்.
அதை தொழிலில் மறுமுதலீடு செய்யலாம். அல்லது பங்கு பத்திரமாக மாற்றலாம். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். கடன்களும், நோய்களும் குறைந்து ஆனந்தம் பெருகும். 27.5.2026 அன்று இரவு 7 மணி முதல் 30.5.2026 அன்று காலை 6:39 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனமாகவும் நிதானமுடனும் செயல்படுவது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் வரலாம். வைகாசி விசாகத்தன்று புனித நீரால் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.