

அஷ்டம சனியின் தாக்கம் குறையும் காலம். விரய ஸ்தானத்தில் உச்சம் பெறும் குருவின் ஒன்பதாம் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சனிபகவான் மேல் பதிகிறது. அஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைய துவங்கும். கோட்சார குருபகவான் தைரியம், தன்னம்பிக் கையை அதிகரிப்பார். தாய் மாமன் மற்றும் தாய் வழி உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். தான தர்மம் செய்து மிக நல்ல புண்ணியங்களை சேர்ப்பீர்கள்.
தசா புத்திகள் சாதகமாக இருந்தால் ராஜயோகத்திற்கும் இடமுண்டு. ஆரோக்கியத்தில் தெளிவு உண்டு. வங்கி இருப்புகள் அதிகரிக்கும். பணம், நகை, விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருக்கவும். பணத்தை யாருக்கும் கடனாக தரவும், வாங்கவும் வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட்டு கடனாக பெற்றுத்தரும் பணம் திரும்ப வர வாய்ப்பு இல்லை. கடுமையாக உழைக்க நேரும். முக்கிய பணிகள் தேங்கும். தொழில் நிமித்தமான அலைச்சலான பயணங்கள் அதிகரிக்கும். வைகாசி விசாகத்தன்று விபூதி அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.
முத்தாய்பான முன்னேற்றங்கள் உண்டாகும் சாதகமான வாரம். லாப ஸ்தானத்தில் நிற்கும் குருபகவானால் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும் புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயரும். சொத்து, மனை வாங்கும் போது மூலப் பத்திரங்களை பார்த்து வாங்குவது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துக்களை பெறுவதற்கான முன்னேற்பாடு செய்வீர்கள்.
குடும்ப உறவில் இருந்த மன கசப்பு நீங்கும். அரசுத்துறை வேலைக்கு முயற்சிப்பீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். பொருளாதா ரத்தில் திருப்தி உண்டாகும். திருமணம் சம்மந்தமான பேச்சு வார்த்தை நடக்கும். காதலர்கள் திருமணத்திற்கு ஆலோசனை செய்வார்கள். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடை வார்கள். வைகாசி விசாகத்தன்று வெண் பொங்கல் படைத்து முருகனை வழிபடவும்.
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய காலம்.ராசி அதிபதி சுக்ரன் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.உத்தியோகம், தொழில் ரீதியாக வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகிட்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். மாணவர்கள் எதிர்கால கல்வி குறித்து திட்டமிடுவீர்கள். திருமணத் தடை அகலும். புத்திர பிராப்தம் உண்டு. வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். உடல் நலம் சீராகும். சிலருக்கு வாரிசு இல்லா சொத்து கிடைக்கும்.
சொத்துக்கள் மீதான டாக்குமெண்ட் பிரச்சினை தீரும். சட்ட ரீதியான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பது நிதர்சனமான உண்மை. தற்போது கோச்சார குரு பகவான் பத்தாம் இடத்தில் ஜூன் 2 முதல் உச்சம் பெற போகிறார் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். எனவே தொழில் உத்தியோகத்தில் பதவியில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது முக்கியமாகும்.யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. வைகாசி விசாகத்தன்று சர்க்கரைப் பொங்கல் படைத்து முருகனை வழிபடவும்.
நினைத்ததை நிறைவேற்றக்கூடிய காலம்.ராசிக்கு சூரியன் மற்றும் புதனின் பார்வை உள்ளது. இது விருச்சக ராசிக்கு விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய கோட்ச்சார அமைப்பாகும்.மேலும் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் உச்சம் பெறுவது விருச்சிக ராசிக்கு இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். ராசி பூர்வ புண்ணிய ஸ்தானம் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுவதால் தொட்டது துலங்கும்.
பாக்கிய பலன்கள் மிகுதியாகும். உங்களது திட்டங்கள் செயல்பாடுகள், எண்ணங்கள் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டு.தொழிலில் லாபமும், ஏற்றமும் உறுதி. பங்கு சந்தையில் ஆர்வம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும்.உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வைகாசி விசாகத்தன்று இளநீர் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.