2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும்,
2026 வார ராசிபலன்
Published on

மேஷம்

வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.இந்த வாரத்தில் உலாவரும் கிரக நிலைகள் உங்களுக்கு நல்ல சுப யோகங்களை பெற்றுத் தரப்போகிறது. பேச்சை மூலதனமாகக் கொண்டவர்கள், வங்கிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆடிட்டிங் துறையினர் மேன்மையான பலன்கள் பெறு வார்கள்.தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும், வேலை செய்யும் இடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

வருமானம்

வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சுகபோகங்களும் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் உண்டாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். மருத்துவச் செலவு குறையும். ஏழரைச் சனியையும் மீறிய சுப பலன்கள் உண்டாகும். 30.5.2026 அன்று காலை 6.39 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பம் ஆகிறது. இலக்கை நிர்ணயித்து செயல் படுவது நல்லது. வைகாசி விசாகத்தன்று குல இஷ்ட தெய்வ வழிபாட்டால் விரும்பியதை அடைய முடியும்.

ரிஷபம்

மனக்கவலைகள் அகலும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்களின் ஆற்றல்,நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், மனச் சங்கடங்கள் மறையும். புதிய சொகுசு வாகனம் மற்றும் சொத்து வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு, வழக்கு, பேச்சு வார்த்தை இழுபறியாகும். தொழிலில் வியாபாரம் பெருகும். வருமானம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம்

அரசு, தனியார் பணியில் உள்ளவர்களுக்கு உபரி வருமானம் மகிழ்ச்சி யைத் தரும். மருமகன், மருமகள் பேரன், பேத்தி போன்ற புதிய உறவுகள் உருவாகும் காலம்.சுய வைத்தியத்தை தவிர்க்க வேண்டும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட பண வரவு உண்டாகலாம்.கண் திருஷ்டி, செய்வினை, ஆரோக்கிய கேடு, வேலையின்மை போன்ற பாதிப்புகள் விலகும்.வைகாசி விசாகத்தன்று ரோஜா மாலை அணிவித்து முருகனை வழிபடவும்.

மிதுனம்

எதிர்காலம் பற்றிய பயம் விலகும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி புதன் ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். மனதில் எண்ணிய திட்டங்களை செயல் படுத்த ஏற்ற நேரம். உங்கள் செயல்பாடுகள் மூலம் நல்ல பெயர் எடுப்பீர்கள். கடனால் பாதித்த கவுரவம், மரியாதை குறைவு மறையும். சமாளிக்க முடியாமல் இருந்த பல பிரச்சினைகளுக்கு இனி சுலபமாக தீர்வுகாண முடியும். சில சுப விரயங்கள் உண்டு. மறைமுக பிரச்சினைகளால் ஏற்பட்ட மன வருத்தம் குறையும்.

திருமண வாழ்க்கை

குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் மீண்டும் நடைபெறும்.போட்டித் தேர்வில், பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. மறுதிருமண முயற்சி சித்திக்கும். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் நடக்கும். புதிய வீடு கட்ட, வாகனம் வாங்க கடன் உதவி பெறலாம். தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் கூட்டாளிகளிடம் அனு சரித்து செல்லவும். வழக்குகள் ஒத்திப்போகும். திருமண வாழ்க்கையில் நிலவிய மனகவலைகள் நீங்கும்.வைகாசி விசாகத்தன்று மஞ்சள் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

கடகம்

மனதில் உற்சாகமும் தெம்பும் பிறக்கும் வாரம். ஜூன் 2 முதல் ராசியில் குரு பகவான் உச்சம் அடைவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பாக்கியஸ்தானம் ராசி பலம் பெற போகிறது.இந்த ஜென்மத்தில் வாழ்க்கையில் நடைபெற வேண்டிய அனைத்து பாக்கிய பலன்களும் நடக்கும்.திருமணம் புத்திர பாக்கியம் போன்றவற்றில் நிலவிய தடை தாமதங்கள் அகலும்.நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

குல தெய்வம்

எதிரிகள் பிரச்சினை முடிவிற்கு வரும்.வேலை இழந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். தன வரவு தாராளமாக ஏற்படும். குடும்ப உறவுகளிடம் அன்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அனுகிரகமும் பக்க பலமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். வைகாசி விசாகத்தன்று இளநீர் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com