கோவை அருகே வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம்
விஷம்
Published on

கோவை:

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள காடுவெட்டிபாளையத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் மோனிஷா(வயது 18). சம்பவத்தன்று மோனிஷா எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். இதனை வேலுசாமி கண்டித்தார். இதனால் மன வேதனை அடைந்த மோனிஷா வீட்டில் வி‌ஷம் குடித்து கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜூகுஷ்வா(35). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்து வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் அவினாசி-கோவை ரோட்டில் சசிகுமார் என்பவர் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது 60 வயது முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். இதில் மொபட் அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கணபதி அருகே உள்ள மணியக்காரம் பாளையத்தை சேர்ந்தவர் டேவிட்ராஜ் (வயது 45). கம்ப்யூட்டர் சர்வீஸ் வேலை செய்து வந்தார். இவர் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இது குறித்து அவரது மனைவி பீனா கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் கணவர் மீது புகார் செய்தார்.

இதனால் மனவேதனை அடைந்த டேவிட் ராஜ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com