அமர்நாத் யாத்திரை - மாரடைப்பால் ஆந்திர பக்தர் உயிரிழப்பு

அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த பக்தர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாத்திரை செல்லும் பக்தர்கள்
யாத்திரை செல்லும் பக்தர்கள்
Published on

ஸ்ரீநகர் :

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். 46 நாட்கள் நீடிக்கும் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆந்திரப்பிரதேச மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்த லக்‌ஷ்மண் ரெட்டி (65) எனும் பக்தருக்கு அமர்நாத் யாத்திரையின் போது மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள மருத்துவ முகாமுக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்தார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com