

ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த அமெரிக்காவின் F-35 போர் விமானத்தை, தங்கள் நாட்டின் நவீன வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதாக ஈரான் இன்று அறிவித்துள்ளது.
மத்திய ஈரான் வான் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக போரை முன்னின்று நடத்தும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) பாரசீக வளைகுடாவில் உள்ள கெஷ்ம் தீவின் வான்பரப்பில், அமெரிக்காவின் F-35 விமானம் ஒன்றை IRGC சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது.
இந்நிலையில் 24 மணி நேரத்திற்குள் இரண்டாவது விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் விமானம் சேதமடைந்த குறிக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக மார்ச் 19 அன்றும் F-35 விமானத்தை தாக்கியதாக ஈரான் தெரிவித்திரிருந்தது.
அப்போது F-35 விமானம் தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக மட்டும் அமெரிக்கா கூறியது.
மார்ச் 22 அன்று அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், ஈரானால் தங்களது போர் விமானங்கள் எதுவும் அழிக்கப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மேலும் 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.