இந்தியாவுக்கு யுரேனியம் விற்க மறுத்த ஆஸ்திரேலியா இப்போது சம்மதித்தது எப்படி?.. ஒப்பந்தத்தின் பின்னணி

2010 லேயே யுரேனியத்தை இந்தியா கேட்டிருந்தாலும் ஆஸ்திரேலியா தர மறுத்தது.
இந்தியாவுக்கு யுரேனியம் விற்க மறுத்த ஆஸ்திரேலியா இப்போது சம்மதித்தது எப்படி?.. ஒப்பந்தத்தின் பின்னணி
Published on

ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் உடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

அதில் ஒன்று, இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து யுரேனியம் ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தம் ஆகும். 

இந்தியாவுக்கு யுரேனியம் விற்பதில் பல ஆண்டுகளாக தயக்கம் காட்டி வந்த ஆஸ்திரேலியா தற்போது தனது முடிவை மாற்றியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

ஏன் இதுவரை சம்மதிக்கவில்லை? 

2015இல் ஆஸ்திரேலியா - இந்தியா இடையே சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானபோதும் யுரேனியம் ஏற்றுமதிக்கு மட்டும் ஆஸ்திரேலியா பிடிவாதமாக மறுத்து வந்தது. 

2010 லேயே சிவில் பயன்பாட்டுக்கு, அதாவது அணுமின் உற்பத்திக்கு யுரேனியத்தை இந்தியா கேட்டிருந்தாலும் ஆஸ்திரேலியா தர மறுத்தது.  ஏனெனில் அப்போது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வதில்லை என்ற கொள்கையை ஆஸ்திரேலியா கொண்டிருந்தது. 

ஆனால் 2015 இல் ஆஸ்திரேலியா இந்தியா இடையே ஏற்பட்ட சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இதை மாற்றியமைத்தது. இருப்பினும் ஏன் ஆஸ்திரேலியா தயங்கியது என்றால் இந்தியாவின் சிவில் அணுசக்தி கொள்கைகள் மற்றும் ஆட்சியின் ஸ்திரத்தன்மை குறித்த நிச்சயமின்மை ஆகியவற்றால் பயந்தது. 

இப்போது எப்படி சம்மதித்தது? 

தற்போது இந்தியாவுக்கு யுரேனியம் விற்க ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம் 2025 டிசம்பரில் இந்தியா அமல்படுத்திய SHANTI சட்டம் ஆகும். சாந்தி சட்டம் மூலம் நாட்டின் சிவில் அணுசக்தி கட்டமைப்பு மொத்தமாக மாற்றியமைக்கப்பட்டது. 

சாந்தி சட்டத்தின் முக்கிய அம்சமாக புதிய லைசன்ஸ் முறை மூலம் இந்தியாவின் அனுஷ்கத்தி துறை தனியாருக்கு திறந்துவிடப்பட்டது. மேலும் வெளிநாட்டு பங்களிப்பும் வரவேற்கப்பட்டது.

இந்த புதிய சீர்திருத்தங்கள் குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு, சிவில் அணு ஒப்பந்தம் மூலம் யுரேனியம் சப்ளை செய்வதில் இருந்த தயக்கத்தை நீக்கியது. இந்தியாவிற்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய புதிய விதிகள் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்புடையதாக அமைந்திருந்தது. 

 அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா இன்னும் உறுப்பினராக இருந்தபோதும், காலப்போக்கில் ஆஸ்திரேலியா உடனான நாடுகள் இடையிலான உறவு வலுவடைந்த நிலையில், குவாட் உள்ளிட்ட தளங்கள் மூலம் ஆஸ்திரேலியவாவுடன் இந்தியா இணக்கமாக செயல்பட்டதாலும், சாந்தி சட்டத்தின் கீழ் விதிகள் பெருமளவில் தளர்த்தப்பட்டதாலும் ஆஸ்திரேலியா தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. 

ஆஸ்திரேலியா - இந்தியா இடையே எட்டப்பட்ட இந்த புதிய ஒப்பந்தம் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் முக்கிய மூலோபாய நகர்வாக பார்க்கப்படுகிறது. 

இந்தியாவுக்கு ஏன் ஆஸ்திரேலியாவின் யுரேனியம் முக்கியம்? 

 இந்தியா 2047க்குள் தனது அணுமின் உற்பத்தியை 8.8 GW இல் இருந்து 100 GW  உயர்த்த இலக்கு வைத்துள்ளது. 

இந்த இலக்கை எட்ட, புதிய ரியாக்டர்களை வாங்குவதும், முதலீடுகளை ஈர்ப்பதும் மட்டுமே போதுமானது கிடையாது. நிலையான யுரேனியம் சப்ளையும் தேவை. 

ஆஸ்திரேலியா உலகின் 28 சதவீத யுரேனியம் இருப்பை கோப்பை கொண்டுள்ளது. எனவே உலகின் மிகப்பெரிய யுரேனியம் வழங்குநரான ஆஸ்திரேலியாவுடன் ஒப்பந்தம் செய்வது இந்தியாவுக்கு முக்கியம். 

X

Maalai Malar
www.maalaimalar.com