சீன கல்லறையில் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பாட்டிலில் ‘பீர்’ கண்டுபிடிப்பு

இந்த மதுபானம் பழத்தை கொண்டு தயாரிக்கப்படாமல் தானியங்களை கொண்டு காய்ச்சப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
Ancient Beer Discovery in China
Published on

சீனாவில் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட, காற்றுப்புகாத வெண்கல பாட்டில் ஒன்றை, தொல்பொருள் ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வெண்கல பாட்டிலின் உள்ளே இருந்த திரவம், சின் காலத்தில் மறக்கப்பட்டதாக அறியப்படும் மதுபான வகையை சேர்ந்த ‘பீர்’ என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் சின பெருஞ்சுவருக்கு அருகில் அமைந்துள்ள ஷான்ஜியாபோ கல்லறையில் அகழ்வாராய்ச்சி செய்தபோது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த வெண்கல பாட்டில் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த பாட்டில் உள்ளே இருந்த திரவம், காய்ந்துபோகாமலும் மாசுபடாமலும் பாதுகாப்பாக இருந்தது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியது.

சீனாவை இறுதியில் ஒன்றிணைப்பதற்கு முன்பாக, சின் அரசு அதிகாரத்திற்கு வரத் தொடங்கிய கி.மு. 547 முதல் கி.மு. 221 வரையிலான காலக்கட்டத்தில் இந்த கல்லறை கட்டப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

சின் அரசின் கி.மு. 475 முதல் 221 வரையிலான காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மதுபானம், பழத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படாமல் வேதியியல் கலவையின் மூலம் தானியங்களை கொண்டு காய்ச்சப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த பீர் கலவையில், “புல், சோளம், தினை, கோதுமை, பார்லி, ப்ரோசா தினை” மற்றும் சுவையை மேம்படுத்துவதற்காக அமினோ அமிலங்கள் சேர்க்கப்பட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த பாட்டிலுக்குள் மதுபானங்களை தயாரிக்க தேவைப்படும் ஆயிரக்கணக்கான பாதுகாக்கப்பட்ட ஈஸ்ட் செல்களும் இருந்துள்ளது.

அந்த வெண்கல பாட்டில், முதலில் புட்டி துணியால் மூடப்பட்டு, பின்னர் அதன் திறப்பு பகுதி மண் மற்றும் கரிம பொருட்களின் கலவையால் மூடப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இதன்மூலம் காற்று உள்ளே நுழைவது தடுக்கப்பட்டு, பல நூற்றாண்டுகளாக திரவம் ஆவியாவது தடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com