ஊத்தங்கரை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

ஊத்தங்கரை அருகே மாமனார், மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வண்ணாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். பெங்களூரில் கொத்தனார் வேலை பார்த்து வருகிரார். இவரது மனைவி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் சத்தியா (27). இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது.

கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகாரணமாக அடிக்கடி சண்டை நடந்துவந்துள்ளது. சத்தியாவிடம் மாமனார், மாமியார் சண்டையின் காரணமாக மனமுடைந்த அவர் நேற்று அதிகாலை மண்எண்ணையை உடல் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் உடல் முழுவதும் தீயில் கருகி உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உயிரிழந்த பெண் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பெண்ணின் பெற்றோர் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் இறப்பு குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ அருண் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com