டாக்டர் சீட்டுக்கு தகுதி பெறாததால் மனைவியை எரித்துக்கொன்றதாக கணவர் மீது புகார்

தெலுங்கானா மாநிலத்தில் டாக்டர் சீட்டுக்கு தகுதி பெறாத மனைவியை எரித்துக்கொன்றதாக கணவர் மீது உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் புகாரளித்துள்ளனர்.
டாக்டர் சீட்டுக்கு தகுதி பெறாததால் மனைவியை எரித்துக்கொன்றதாக கணவர் மீது புகார்
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் டாக்டர் சீட்டுக்கு தகுதி பெறாத மனைவியை எரித்துக்கொன்றதாக கணவர் மீது உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் புகாரளித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நகோல் பகுதியைச் சேர்ந்த ஹரிகா என்பவர் மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு போதிய மதிப்பெண் இல்லாததால் பல் மருத்துவத்திற்கான இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், நேற்று முந்தினம் ஹரிகாவின் கணவர், அப்பெண்ணின் பெற்றோருக்கு போன் செய்து ஹரிகா உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்ததாக கூறியுள்ளார்.

ஆனால், மருத்துவ சீட் கிடைக்காத ஆத்திரம் மற்றும் வரதட்சணை கேட்டு தராத கோபத்தால் ஹரிகாவின் கணவர் தான், அவரை எரித்துக்கொன்றதாக போலீசில் அப்பெண்ணின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். ஹரிகாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ள போலீசார் இது தொடர்பாக கணவரின் பெற்றோரை கைது செய்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் மரணத்திற்கான காரணம் உறுதியாக தெரிய வரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com