

போரூர்:
மேற்கு மாம்பலம் நக்கீரர் தெருவைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் இவரது மனைவி உமா (வயது 68). இவர் நேற்று இரவு அதே பகுதி பிருந்தாவன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் உமாவை தாக்கி அவர் அணிந்திருந்த 3½ பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.