சென்னையில் தண்ணீர் லாரி மோதியதில் குழந்தை பலி

சென்னையின் பம்மலில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை பரிதாபமாக பலியானது.
சாலை விபத்து
சாலை விபத்து
Published on

சென்னை:

சென்னையில் பல்லாவரம் அடுத்த பம்மலில் ஒரு வயது குழந்தையுடன் தம்பதியினர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி பைக் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் பைக்கில் இருந்த குழந்தை பரிதாபமாக பலியானது. மேலும், பைக்கில் இருந்த தம்பதியினர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சென்னையில் தண்ணீர் லாரி மோதி பொதுமக்கள் பலியாகி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com