கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் நேற்று 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 600 கன அடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
Published on

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 7 மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று 4 ஆயிரத்து 696 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4 ஆயிரத்து 337 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நேற்று காலை 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் மாலையில் தண்ணீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலையும் அதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கால்வாய் பாசனத்திற்கு நேற்று 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 600 கன அடியாக குறைக்கப்பட்டது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

நேற்று 103.8 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 103.74 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்காவிட்டால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com