

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆகிர் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளிக்கையில் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் இடதுசாரி அமைப்புகள் வலுவான நிலை கொண்டுள்ள மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் பெருமளவில் குறைந்துள்ளன.
கடந்த ஜூலை 2014 முதல் ஜூலை 2017 வரையிலான காலகட்டங்களில் வன்முறை சம்பவங்கள் 22 சதவீதம் குறைந்துள்ளன. 2014ல் 3,999 ஆக இருந்த வன்முறை சம்பவங்கள், 2017ல் 3,109 ஆக குறைந்துள்ளது.
பொதுமக்களுக்கு மற்றும் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் நக்சல்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்படுவது கடந்த 3 ஆண்டுகளில் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014ல் 228 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2017ல் 406 ஆக அதிகரித்துள்ளது. நக்சல்கள் அதிக அளவில் கொல்லப்பட்டு வருவதால் வன்முறை சம்பவங்களும் வெகுவாக குறைந்து வருகின்றன.