வியட்நாம் அதிபர் திரன் தாய் குவாங் இந்தியா வருகை- ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு

வியட்நாம் அதிபர் திரன் தாய் குவாங் தனது மனைவியிடன் மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜனாதிபதி மாளிகை வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வியட்நாம் அதிபர் திரன் தாய் குவாங் இந்தியா வருகை- ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு
Published on

வியட்நாம் அதிபர் திரன் தாய் குவாங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று இரவு தனது மனைவியுடன் டெல்லி வந்தடைந்த திரனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தின் அழைப்பை ஏற்று இவர் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார் திரன். அவரை ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர்.  அவருக்கு முப்படை அணிவகுப்புடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.

மேலும் இந்திய தொழிலதிபர்களுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திரன் தனது வருகையின் போது பீகாரில் உள்ள புத்த கயாவிற்கு சென்று வழிபட உள்ளதாக தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com