வானகரம் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு

வானகரம் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் பறிப்பு
செல்போன் பறிப்பு
Published on

போரூர்:

வானகரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (30). மதுரவாயலில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் பணிபுரிந்து வருகிறார்.

விஜய் நேற்று இரவு 1 மணி அளவில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ஓடம்மா நகர் பைபாஸ் சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது விஜய்யை வழிமறித்த 3பேர் கும்பல் அவரை கத்தியால் தலையில் வெட்டி செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

தலையில் வெட்டுபட்ட விஜய் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரவாயல் போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com