கிருமாம்பாக்கத்தில் வேன் மோதி தொழிலாளி பலி

கிருமாம்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது வேன் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருமாம்பாக்கத்தில் வேன் மோதி தொழிலாளி பலி
Published on

பாகூர்:

புதுவை கிருமாம்பாக்கம் அருகே உள்ள காட்டுக்குப்பம் பாரதியார் வீதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). வெல்டராக உள்ளார். இவர், கிருமாம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கடலூர்- புதுவை சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது கடலூரில் இருந்து புதுவை நோக்கி வந்த டெம்போ டிராவலர் வேன் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நடராஜன் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.

இது தொடர்பாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com