ஜம்மு - காஷ்மீர்: வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற பக்தர் மாரடைப்பால் மரணம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை சென்ற பக்தர் மாரடைப்பால் உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர்: வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற பக்தர் மாரடைப்பால் மரணம்
Published on

ஜம்மு:

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கட்ரா பகுதியில் பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் என லட்சக்கணக்கில் பலரும் வந்து செல்வது வழக்கம். கடந்த ஆண்டில் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு 80 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை வந்த பக்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் கவுதம்புத்நகர் மாவட்டம் கோரி பச்சேரா பகுதியை சேர்ந்த விக்ரம் சிங் ராவல் (45), என்ற பக்தருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அருகிலுள்ள மருத்துவ மையத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.  அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் உயிரிழந்தார் என கூறியதாக தெரிவித்தனர். 

#tamilnews #jammukashmir #vaishnodevitemple

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com