திருவாரூர் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தீக்குளிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் வேறொரு பெண்ணுடன் கணவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தகராறில் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தீக்குளிப்பு
Published on

திருவாரூர்:

திருவாரூர் அருகே எடையூர் காவல் சரகம் அம்மனூரை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 35) விவசாயி. இவரது மனைவி காயத்ரி (வயது 30) இவர்களுக்கு வேதவர்ஷினி (4), விஷ்ணுபிரியன் (1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். முருகதாசுக்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக கடந்த 30-ந் தேதி கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் காயத்ரியை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த காயத்ரி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டாராம். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காயத்ரி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com