பாபநாசம் அருகே டிராக்டர் மோதி சிறுமி பலி

பாபநாசம் அருகே டிராக்டர் மோதிய விபத்தில் 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

பாபநாசம்:

பாபநாசம் அருகே குருபாலக்குடி வடக்கு தெருவில் வசித்து வருபவர் சங்கர். விவசாயி. இவரது மகள் கீர்த்திகா(வயது3). இவர் அதே கிராமத்தில் பால்வாடியில் படித்து வந்தார். பள்ளி முடிந்து கீர்த்திகா குருபாலக்குடி விழுதியூர் இடையே வந்தபோது பின்னால் வந்த டிராக்டர் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கீர்த்திகா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதுகுறித்து அவரது தந்தை சங்கர் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com