மழைக் காலங்களில் எற்படும் மின் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு எளிதில் புகார் தெரிவிக்க வசதியாக வாட்ஸ்-அப் சேவை மையங்களை மின்சார வாரியம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மின்சாரம் சம்பந்தப்பட்ட புகார்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் தகவல் தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்-அப் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள், மின் உபகரணங்கள் பற்றிய புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை முழு முகவரி, புகாரின் தன்மை, இடம், பகுதி மற்றும் புகைப்படத்துடன் கீழே தெரிவிக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்ட வாட்ஸ்-அப் எண்களுக்கு தெரியப்படுத்தலாம். பெறப்படும் தகவல்கள், தொடர்புடைய அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை-9445850829, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்-9444371912, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல்-9445851912, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கரூர்-9486111912, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை-9443111912, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர்-9445855768, கோயம்பத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி-9442111912, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர்-8903331912, வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி-6380281341.
பொதுமக்கள் மேற்கூறிய வாட்ஸ்-அப் எண்கள் மூலம் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை முழுவிபரத்துடன் தெரியப்படுத்தலாம்.