திருப்பூரில் குடையில்லாமல் வந்தால் மது கிடையாது- கலெக்டர் அறிவிப்பு

திருப்பூரில் டாஸ்மாக் கடை நளை திறக்கப்படுகிறது. குடையில்லாமல் வருபவர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் விஜயகார்த்திகேயன்
கலெக்டர் விஜயகார்த்திகேயன்
Published on

திருப்பூர்:

கொரோனாவால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் நாளை (வியாழக்கிழமை) திறக்கப்பட உள்ளது. இது குறித்து திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு கடையிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணிக்கு அமர்த்தி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். சமூகஇடைவெளியை தீவிரமாக கடைபிடிக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் தவறாமல் குடையுடன் வந்து, குடை பிடித்து நின்று மதுபானங்களை வாங்கி செல்ல வேண்டும். குடையுடன் வராதவர்களுக்கு மதுபான வகைகள் வழங்கப்படாது. 

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தனிநபர் சுத்தம் பேணப்படுவதோடு டாஸ்மாக் கடை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக முக கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. பார்கள் திறக்க அனுமதி இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com