திருப்பூர் பகுதியில் மழை- விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூரில் நேற்று ½ மணி நேரம் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காங்கேயம்- கோவை சாலையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்.
காங்கேயம்- கோவை சாலையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்.
Published on

திருப்பூர்:

திருப்பூரில் நேற்று காலையில் வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் மாலையில் வாகனம் மேக மூட்டம் காணப்பட்டது. பின்னர் இரவு மாலை 5.30 மணிக்கு மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணிநேரம் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள ஒன்றைக்கண் பாலம் வழியாக சாக்கடைநீருடன் மழை நீர் சென்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

அதே போல் மங்கலத்தை அடுத்த சுற்றுவட்டாரப் பகுதிகளான நடுவேலம்பாளையம், பூமலூர், இடுவாய்,சாமளாபுரம், 63 வேலம்பாளையம், இச்சிப்பட்டி ஆகிய பகுதியில் ½ மணி நேரம் மழை பெய்தது. இந்த மழை குறித்து இடுவாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில் “விவசாயிகள் ஆவணி மாதத்தில் மானாவாரி முறையில் சோளம் சாகுபடியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி மானாவாரி முறையில் சோளம் சாகுபடிக்கு முன்னோட்டமான மழையாக இந்த மழையை கருதுகிறோம். இந்த மழையால் மானாவாரி நிலங்களில், கால்நடை மேய்ச்சல் நிலங்களில் பசும்புற்கள் நன்கு வளரும். இதனால் கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறை இருக்காது” என்றார்.

காங்கேயத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் தூறல் விழ ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை 1 மணிநேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மோட்டார் சைக்கிளின் சக்கரம் மூழ்கும் அளவுக்கு மழைநீர் சென்றது. இதனால் மழை வெள்ளத்தில் ஓட்டி சென்ற மொபட்டுகள் பழுதாகி நின்றன.

மேலும் காங்கேயம்-கோவை சாலையில் வேப்ப மரம் ஒன்று வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் வாகன போக்குவரத்து அரை மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. பின்னர் காங்கேயம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

காங்கேயம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com