திருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள் கைது

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வழங்கி பக்தர்களிடம் அதிக பணம் வசூலித்த 23 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக 5 வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுடன் பக்தர்கள் நேற்று வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு சென்றனர். அவர்களிடம் இருந்து டிக்கெட்டுகளை பெற்ற விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த டிக்கெட்டுகளை திருப்பதியை சேர்ந்த சீனிவாசனிடம் 3 பக்தர்கள் ரூ.16,500ம், 2 பக்தர்கள் ரூ.7 ஆயிரம் கொடுத்தும் வாங்கியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சந்தேகம் அடைந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் சீனிவாசனை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

விசாரணையில் மேலும் 22 பேர் இதுபோன்று இடைத்தரகர்களாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த 23 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com