தாய் கண் முன்பு வாலிபர் வெட்டிக் கொலை- வீடு புகுந்து 3 பேர் கும்பல் வெறிச்செயல்

திருச்சுழி அருகே தாய் கண் முன்பு வாலிபர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் கண் முன்பு வாலிபர் வெட்டிக் கொலை- வீடு புகுந்து 3 பேர் கும்பல் வெறிச்செயல்
Published on

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்தவர் நூர் முகமது (வயது 32), வாடகை கார் டிரைவர். இவர் தனது தாய் பாட்சா பீவியுடன் வசித்து வந்தார்.

நேற்று பண்டிகை நாள் என்பதால் வீட்டில் இருந்தார். இரவு வழக்கம் போல் குடும்பத்துடன் தூங்கினார்.

இரவு 11 மணி அளவில் யாரோ வீட்டுக்கதவை தட்டினர். சத்தம் பலமாக கேட்கவே நூர்மகமது கதவை திறந்தார்.

அப்போது உள்ளே நுழைந்த அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் தாய் கண் முன்பே நூர் முகமதுவை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. உடனே அவர்களிடம் இருந்து தப்பி நூர் முகமது வெளியே ஓடினார்.

ஆனாலும் அந்த கும்பல் துரத்திச் சென்று வெட்டியது. இதை பார்த்த அவரது தாய் அதிர்ச்சியடைந்து கூக்குரலிட்டார்.

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த நூர்முகமது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவர் இறந்த பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

இது குறித்து தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நூர் முகமது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை தேடி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com