திருச்செங்கோட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட தலைவர் பரணீதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி
Published on

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட தலைவர் பரணீதரன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்ப பெற வேண்டும், குற்றவியல் நடைமுறை சட்டத்தில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு பிரிவை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி 25 வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் திருச்செங்கோடு வக்கீல்கள் சங்கத்தலைவர் சேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com