திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி

திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெரிய சிங்களாந்தி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. இவருக்கு ஒரு மகள், ஒருமகன் உள்ளனர். மகன் விஷ்ணுப்பிரியன் (வயது15). அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது நடைபெற உள்ள பொதுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருந்தான். இந்நிலையில் தங்களது புதிய வீடு கட்டுமானப்பணி நடை பெறும் பகுதியில் இருந்த தண்ணீரில் குளித்துவிட்டு மின்மோட்டாரை ஈரமான கையுடன் ஆப் செய்யும்போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் மாணவனின் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டி.எஸ்.பி பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com