திருவொற்றியூரில் லாரி மோதி என்ஜினீயர் பலி

திருவொற்றியூரில் லாரி மோதிய விபத்தில் என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவொற்றியூரில் லாரி மோதி என்ஜினீயர் பலி
Published on

திருவொற்றியூர்:

திருவொற்றியூர், சாத்து மாநகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் மதன் (வயது 21), சமீபத்தில் என்ஜினீயரிங் படிப்பு முடித்து வேலை தேடி வந்தார்.

இந்த நிலையில் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து மதனுக்கு வேலைக்கான நேர்முக அழைப்பு வந்து இருந்தது. இன்று காலை அவர் நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

திருவொற்றியூர் டோல்கேட் அருகே வந்த போது பின்னால் வந்த டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மதன் பரிதாபமாக இறந்தார்.

விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com