திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை தாக்கிய காதலன் மீது வழக்கு

திருவள்ளூர் அருகே திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை தாக்கிய காதலன் மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை தாக்கிய காதலன் மீது வழக்கு
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த விடையூர் அண்ணை இந்திரா நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் முருகன் (22). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் எதிர் வீட்டை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இருவரும் பல இடங்களில் சுற்றி வந்ததாகவும், அப்போது முருகன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண், முருகன் வீட்டுக்குச் சென்று திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதற்கு முருகன் மற்றும் அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பெண்ணை உருட்டுக்கட்டையால் அடித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் செய்தார். இது தொடர்பாக முருகன், அவரது தாய், தங்கை, அண்ணன் சோமு, அவரது நண்பர் பூவரசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com