திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தாய்-மனைவி தீக்குளிக்க முயற்சி

கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டதால் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தாய் மற்றும் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தாய்-மனைவி தீக்குளிக்க முயற்சி
Published on

திருவள்ளூர்:

மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் அருகே உள்ள சுலேரி பாளையத்தை சேர்ந்தவர் சிவா (வயது 40). கடந்த 26-ந்தேதி மகளின் திருமண பத்திரிகை கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் சிவாவை வழிமறித்து வெட்டி கொலை செய்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை தொடர்பாக நந்தியம்பாக்கத்தை சேர்ந்த எட்வின், லைட்டோ, செல்வா ஆகியோர் எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே கொலையில் தொடர்புடையதாக நந்தியம்பாக்கத்தை சேர்ந்த மதனை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். இதற்கு அவரது மனைவி பிரியா, தாய் ரேணுகா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இன்று மதியம் 2 பேரும் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணைகேனை எடுத்து தீக்குளிக்க முயன்றனர்.

பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து மீட்டனர். அவர்களிடம் இருந்த மண்எண்ணை கேன் பறிமுதல் செய்யப்பட்டது.

பிரியா, ரேணுகாவிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தால் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com