

பேரையூர்:
பேரையூர் அருகே உள்ள கொல்லவீரன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களது மகள் கவிதா (வயது 17) இவர் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். தினமும் இவர் ஆலைக்கு சொந்தமான வேனில் வேலைக்கு செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று கவிதா வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் நீண்ட நேமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதட்டமடைந்த கண்ணன் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடினார். பலன் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாவை தேடி வருகின்றனர்.