

தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.
அவர் கூறியதாவது:-
எதிர்கட்சிகளை எதிரிகட்சிகளாக நினைக்காமல் அரசியலில் ஒரு மாண்பை உருவாக்கி உள்ளார் முதலமைச்சர் விஜய்.
717 மதுக்கடைகளை மூடிய அறிவிப்பு, பெண்களை பாதுகாப்புக்கும் சிறப்பு படை, மீனவரை பாதுகாக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
த.வெ.க. தனது ஆட்சியை தக்கவைக்க குதிரை பேரம் நடத்தியதாக வரும் குற்றச்சாட்டுகள் வேதனை தருகிறது.
முதலமைச்சர் விஜயின் ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும்.
எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஒருவர் முதலமைச்சராகி இருப்பது மகிழ்ச்சி.
முதலமைச்சர் விஜயை சந்திக்க அன்று முகத்தை மூடி வந்தவர் யார் என்பதை முதலமைச்சர் விஜய் தெரிவிக்க வேண்டும்.
இவ்வா அவர் வலியுறுத்தினார்.