

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட சமாதானபுரம் பகுதியில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று புதிய நியாயவிலைக் கடை கட்டப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2025 - 2026 ஆம் நிதியாண்டில் ரூ.15 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இந்த நவீன கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இந்த புதிய நியாயவிலைக் கடையை, இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ரிப்பன் வெட்டி முறைப்படி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, திட்டத்தின் விவரங்கள் அடங்கிய கல்வெட்டினையும் அவர் திறந்து வைத்து, பொதுமக்களுக்குப் பொருட்களை வழங்கினார்.
இந்தத் திறப்பு விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர், பொ.அன்பரசி ராமராஜன் M.A., வட்டார தலைவர் டேனியல், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், ஜா.பிரபா, 15 வது வார்டு உறுப்பினர் உட்பட அகஸ்தீஸ்வரம் தமிழக வெற்றி கழக முக்கிய நிர்வாகிகளும், பொதுமக்கள் மற்றும் R.பாண்டியராஜ் உதவி செயற்பொறியாளர், து.பூதப்பாண்டி அகஸ்தீஸ்வரம் முதல்நிலை பேரூராட்சி செயல் அலுவலர், ராஜாரமேஷ் இளநிலை பொறியாளர் கலந்து கொண்டனர்.
புதிய நியாயவிலைக் கடை திறக்கப்பட்டதன் மூலம், சமாதானபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் இனி நீண்ட தூரம் செல்லாமல் தங்கள் பகுதிகளிலேயே தங்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.