

திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“பாஜக - தவெக இடையேயான இணைப்புப் பணியை வைகோ செவ்வனே செய்துவருகிறார். இன்று திமுகவிற்கு என்ன நடக்கிறதோ, நாளை தவெகவிற்கு அது நடக்கும். தான் சொன்னதை தவெக செய்யவில்லை என்றால், விமர்சிப்பார் வைகோ. 32 ஆண்டுகள் என்னை வழிநடத்தியவர். 32 ஆண்டுகளில் கடைசி 4 ஆண்டுகள் அவருடைய மகனுக்காக என்னிடம் பாராமுகமாக இருந்தார்.
என்னை வெளியேற்ற திருச்சியில் எல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தினார். என்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கட்சியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிக்கைவிட்டார். என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற வைகோ பல நாடகங்களை நடத்தினார், அவர் மகன் அதன்பின் நின்று இயக்கியவர். அதனால் எனக்கு எந்த இழப்பும் இல்லை.
நாங்கள் வெளியேறிய பின் தற்போது அந்த இயக்கம் காணாமல் கரைந்துபோய் வருகிறது. சுதந்திரா கட்சி ராஜகோபாலாச்சாரி காலத்திலேயே காணாமல் போனது. தமிழரசு கழகம் ம.பொ.சி காலத்திலேயே காணாமல் போனது. சிவாஜி கணேசன் கட்சியும் இரண்டு ஆண்டுகளிலேயே காணாமல் போனது. இந்த வரலாற்றில் தற்போது இணையவுள்ள கட்சி மகன் திமுக.
மகன் கனடாவின் டொரோண்டோவில் செட்டில் ஆகிவிடுவார். பாஜக - தவெக இணைப்பு வேலைய வைகோ பார்த்து வருகிறார்.” என தெரிவித்தார்.