

தி.மு.க.வில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் நேற்று இரவு திமுக வேட்பாளர் நேர்காணலில் துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.
இதையடுத்து வேட்பாளர் நேர்காணலில் முதல்வர் கேட்ட கேள்விகள் குறித்து ஊடகங்களிடம் பேசிய உதயநிதி, "என் தொகுதிய பத்தி கேட்டாங்க. SIRல எவ்ளோ வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்காங்க, நாடாளுமன்றத் தேர்தல் பத்தியெல்லாம் கேட்டாங்க, தொகுதில என்னென்ன செஞ்சி கொடுத்திருக்கீங்கன்னு கேட்டாங்க. சொன்னேன். போயிட்டு வாங்க யோசிச்சு முடிவு பண்றோம்னு சொன்னாங்க" என்று தெரிவித்தார்.