TN Assembly Election | தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நாளையுடன் முடிவடைகிறது

இன்று மாலை திருவள்ளூர், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார்.
TN Assembly Election | தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நாளையுடன் முடிவடைகிறது
Published on

சென்னை:

தி.மு.க.வில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் நாளான கடந்த 17-ந்தேதி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட விரும்பி மனு கொடுத்திருந்தவர்களை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். ஒவ்வொருவரிடமும் தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு வந்தது.

ஒவ்வொரு நாளும் காலை-மாலை இரு நேரமும் நேர்காணல் நடந்தது. இந்த நேர்காணல் இரவு 9.30 மணி வரை நடக்கிறது.

அந்த வகையில் இன்று காலை கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கான நேர்காணல் நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் நேர்காணல் நடத்தப்பட்டது.

இன்று மாலை திருவள்ளூர், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார்.

நாளை (திங்கட்கிழமை) காலை திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து நாளை மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். அத்துடன் நேர்காணல் நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com