லஞ்சம் வாங்கிய வீடியோ: த.வெ.க நிர்வாகி அதிரடி நீக்கம்

தவெகவில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த நிலையில் நீக்கம்.
Veerasamy
Published on

செங்கல்பட்டு மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரா (எ) வீராசாமி, ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.

கட்சியில் இருந்து நீக்கம்

லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியான நிலையில், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.

வீராசாமி தவெகவில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த நிலையில் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக வெற்றிக் கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளராக பதவி வகித்து வந்த வீரா [எ] வீராசாமி இன்று முதல் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளிலிருந்து நீக்கப் படுகின்றார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

TVK
X

Maalai Malar
www.maalaimalar.com