

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு தேதியை அதிரடியாக மாற்றி உள்ளது. செப்டம்பர் 6ம் தேதி நடைபெற இருந்த குரூப் 1 தேர்வு, செப்டம்பர் 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசின் பெரும்பாலான துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. குரூப் வாரியாக தேர்வு நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குருப் 4 என பல்வேறு தேர்வுகளை நடத்தி, இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து அதிரடியாக சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது குரூப் 1 தேர்வு குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி மாற்றி உள்ளது. அதாவது, குரூப் 1 முதல் நிலை தேர்வு செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், அதனை டிஎன்பிஎஸ்சி மாற்றி உள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 23.06.2026 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 அறிவிக்கையில் முதல்நிலைத் தேர்வானது 06.09.2026 மநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தேர்வானது 27.09.2026 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, தேர்வர்கள் இதற்கு ஏற்றவாறு தங்கள் திட்டங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். குரூப் 1 முதல்நிலைத் தேர்வு மூலம் 26 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. துணை ஆட்சியர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட 26 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறும்.
குரூப் 1 தேர்வு மூலம் தேந்தெடுக்கப்படுபவர்களுக்கு 7வது ஊதியக் குழுவின்படி அடிப்படை ஊதியம் ரூ.56,100 முதல் ரூ.1.77 லட்சம் வழங்கப்படும். இதில் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, பல்வேறு படிகளும் வழங்கப்படும். பணியில் தொடக்க நிலையிலேயே ரூ.80,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் இருக்கும். எனவே, குரூப் 1 முதல்நிலை தேர்வு தயாராகுபவர்கள் இந்த அறிவிப்பை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.