

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்களைத் திரும்பபெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.
இந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், த.வெ.க. வேட்பாளர் வெங்கடரமணன் ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுளள்து.
தருமபுரி சட்டசபை தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.