தொகுதி பங்கீடு: அமித் ஷாவை சந்தித்து டி.டி.வி. தினகரன் பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து பேசினார்.
தொகுதி பங்கீடு: அமித் ஷாவை சந்தித்து டி.டி.வி. தினகரன் பேச்சுவார்த்தை
Published on

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டது.

மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி,

அடுத்த 4 நாட்களில் தொகுதி பங்கீடு குறித்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவு பெறும். கூட்டணி கட்சிகளில் யார் யாருக்கு எந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதோ அங்கு வாய்ப்பு வழங்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறினார்.

இதையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைகளும் தீவிரபடுத்தப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக தொகுதிகளை முடிவு செய்வதற்காக அன்புமணி, டி.டி.வி. தினகரன் இருவரும் நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சந்தித்தார். என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள டி.டி.வி. தினகரன் தொகுதி பங்கீடு தொடர்பாக அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com