எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. டெல்லி தலைமை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது - திருமாவளவன்

கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை, தாமதம் என்றே கூறலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. டெல்லி தலைமை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது - திருமாவளவன்
Published on

சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் 4 நாட்கள் தலைமை அலுவலகத்தில் ரூ.5,000 செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம். வேளச்சேரி தொகுதியில் திருமாவளவன் போட்டியிட வி.சி.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

* கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை, தாமதம் என்றே கூறலாம்.

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க. கூட்டணி நலனுக்கு எதிராக போகாது.

* விசிக வேட்பாளர்களுக்கு நேர்காணல் செய்வதற்கான வாய்ப்பு குறைவு தான்.

* கூட்டணியின் நலன் கருதி போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு எடுப்போம்.

* வேல்முருகனிடம் பலமுறை பேசி உள்ளேன். தி.மு.க. கூட்டணியில் அவர் தொடர்வது அவருக்கும் கூட்டணிக்கும் இன்றியமையாத தேவை.

* அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. டெல்லி தலைமை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது.

* அ.தி.மு.க. டெல்லியை தேடிச் செல்லும் நிலை உருவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com