TN Assembly Election| தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

தி.மு.க. நேரடியாக 164 இடங்களிலும், உதய சூரியன் சின்னத்தில் 11 இடங்களில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
TN Assembly Election| தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
Published on

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட முக்கியமான கட்சிகள் அனைத்தும் இடம் பெற்று உள்ளன.

அதன்படி ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு:-

காங்கிரஸ்-28, தே.மு.தி.க.-10, விடுதலை சிறுத்தைகள்-8, இந்திய கம்யூனிஸ்டு-5, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-5, ம.தி.மு.க.-4, மனிதநேய மக்கள் கட்சி-2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி-2, கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை, எஸ்.டி.பி.ஐ., மனிதநேய ஜன நாயக கட்சி, தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டன. எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டாலும் தொகுதிகளை அடையாளம் காண்பதில் அடுத்த சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவுடன் கூட்டணி கட்சியின் பேச்சுவார்த்தை குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக முடிவு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனை தொடர்ந்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, தி.மு.க. கூட்டணி தொகுதிப் பட்டியலை மூத்த தலைவர்கள் குழு வெளியிட்டது.

காங்கிரஸ்:

பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), சோளிங்கர், உதகை, ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர் (தனி), கவுண்டம்பாளையம், ஆத்தூர், பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

தளி, திருத்துறைப்பூண்டி (தனி), ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), திருப்பூர் வடக்கு, பவானிசாகர் (தனி)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்):

கீழ்வேளூர் (தனி), கந்தர்வக்கோட்டை(தனி), பத்மநாபபுரம், பழனி, திருவொற்றியூர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி:

காட்டுமன்னார்கோவில் (தனி), செய்யூர் (தனி), திருப்போரூர், அரக்கோணம் (தனி), திண்டிவனம் (தனி), பெரியகுளம் (தனி), கள்ளக்குறிச்சி (தனி), பண்ருட்டி.

மதிமுக:

மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி)

தேமுதிக:

விருத்தாசலம், விருதுநகர், தருமபுரி, குடியாத்தம், சேலம் மேற்கு, போளூர், பல்லாவரம், திருத்தணி, திருத்தணி, ஓமலூர், மைலம்.

பாபநாசம், வாணியம்பாடி ஆகிய 2 தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி போட்டியிடுகிறது.

மனித நேய மக்கள் கட்சி நாகை, மணப்பாறை தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பொள்ளாச்சி, திருச்செங்கோடு தொகுதிகளில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது.

முக்குலத்தோர் புலிப்படை சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறது.

சிதம்பரம் தொகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது.

எஸ்.டி.பி.ஐ.கட்சி நன்னிலம் தொகுதியில் போட்டியிடுகிறது.

நத்தம் தொகுதியில் தமிழர் தேசம் கட்சி போட்டியிடுகிறது.

தி.மு.க. நேரடியாக 164 இடங்களிலும், உதய சூரியன் சின்னத்தில் 11 இடங்களில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com