TN Assembly Election| ஏ.சி.சண்முகம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

புதிய நீதி கட்சி வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
TN Assembly Election| ஏ.சி.சண்முகம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு
Published on

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 26 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து தீவிர பிரசாரத்தில் சீமான் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, தேர்தல் அறிக்கை மற்றும் முதற்கட்டமாக 23 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே, அ.தி.மு.க.வின் முழுமையான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சிக்கு மதுரை மத்திய தொகுதியை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

ஏ.சி.சண்முகம் மதுரை வடக்கு தொகுதியை கேட்டு வந்த நிலையில், மதுரை மத்திய தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதி கட்சி வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com