

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
த.வெ.க. ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காக பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை.
தமிழ்நாட்டில் 3 கோடி மக்கள் த.வெ.க.விற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
த.வெ.க. ஆட்சியை 65 சதவீத மக்கள் நிராகரித்துள்ளனர். மிக முக்கியமாக தேர்தலில் த.வெ.க.விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆளுங்கட்சிக்கு 1.72 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். த.வெ.க.வுக்கு எதிராக 3.21 கோடி பேர் வாக்களித்தனர்.
த.வெ.க. ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காக பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களில்லை.
118 உறுப்பினர்களை கொண்ட கட்சியோ, கூட்டணியோ தான் ஆட்சிக்கு வரமுடியும்.
தனது வெற்றி மீது நம்பிக்கை இல்லாமல் விஜய் இரு இடங்களில் போட்டியிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட், விசிக, IUML கட்சியினர் தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளனர். வெளியில் இருந்து தான் ஆதரவு தருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதால் தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.
உங்கள் கொள்கை எதிரி என்று சொன்ன ஒரு எம்.எல்.ஏ.வை கட்சி தலைவருக்கே தெரியாமல் ஆதரவளிக்க வைத்துள்ளனர்.
புதிய ஆட்சி, புதிய ஆட்சி என்று கூறினீர்கள், ஆனால் புஷ்பா பட பாணியில்தான் ஆட்சி நடக்கிறது.
முதலமைச்சர் ஒவ்வொரு கட்சி தலைவரையும் சந்திக்கும் முன்பு ஒரு சோபா செல்கிறது. அதற்கு பின்னால் முதலமைச்சரும் செல்கிறார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இரண்டாக பிளவுப்பட்டுள்ளனர்.
த.வெ.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக தெரிவித்தார்.