

சென்னை வானகரத்தில் நடைபெறும் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உதயசூரியன் சின்னத்தில் நின்று தான் எம்ஜிஆர் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
உங்களுக்கு நான் தலைவனாக இருக்கலாம், ஆனால் எனக்கு தலைவன் கலைஞர் தான் என எம்ஜிஆர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 5000 பேர் திமுகவில் இணைந்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின். அதிமுகவில் இருந்து பல ஆண்டுகள் உண்மையாக கடுமையாக ஓயாமல் உழைத்தவர்.
தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த கட்சி திமுக. எம்ஜிஆர் இருந்த கட்சி திமுக, பவள விழா கண்டிருக்கும் கட்சி திமுக.
சட்டமன்றத்தில் நாங்கள் கேள்வி கேட்கும்போது அமைச்சராக இருந்த பெஞ்சமின் புள்ளி விபரங்களுடன் பதிலளிப்பார்.
தேர்தல் முடிந்த பின்னர் வெற்றி பெற்ற கட்சியில் பலர் இணைவார்கள், ஆனால் இன்றோ எதிர்கட்சியில் பலர் இணைகிறார்கள்.
திமுக வலுவாக இருந்தால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என நினைத்து இணைந்துள்ளார்கள்.
தவெகவின் ஒரு மாத கால ஆட்சியிலேயே தமிழ்நாடு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஒருபுறம் என்றால் அதில் ஆளுங்கட்சியினரே ஈடுபடுவது வேதனை தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.