விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை- த.வெ.க.விற்கு ஆதரவளிப்பது குறித்து பிரேமலதா பதில்

முதல்முறையாக சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாக செல்லவிருக்கிறேன், அங்கு விருத்தாசலம் மக்களுக்காக பேசுவேன்.
விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை- த.வெ.க.விற்கு ஆதரவளிப்பது குறித்து பிரேமலதா பதில்
Published on

விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்ற தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா வெற்றி சான்றிதழை பெற்றார். அதனை தொடர்ந்து அவரிடம் த.வெ.க.விற்கு ஆதரவு தருவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பிரேமலதா, நாங்கள் மதசார்பற்ற வெற்றி கூட்டணியில் உள்ளோம் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா கூறியதாவது:-

புதிதாக ஆட்சி அமைக்கப்போகிறவர்களுக்கு எங்களது மனப்பூர்வமான வாழ்த்துகள். முதல்முறையாக சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாக செல்லவிருக்கிறேன், அங்கு விருத்தாசலம் மக்களுக்காக பேசுவேன்.

விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை அவரது வெற்றிக்கு வாழ்த்துகள். விஜய் எங்களுக்கு புதியவர் கிடையாது, பக்கத்து வீட்டில் இருந்தவர், கேப்டனுடன் ஆரம்பம் முதலே பழகியவர். விஜய் நல்லபடியாக ஆட்சி அமைக்கட்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com