அன்புமணிக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை!-பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்

ராமதாஸ் ஐயாவுடன் நான் இருந்த காரணத்திற்காக என்னை 'துரோகி' என்றார்.
arul-anbumani
Published on

சேலம் சூரமங்கலத்தில் பாமக முன்னாள் எம்எல்ஏ இரா.அருள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அருள் பேசியதாவது,

தான் 1989-ஆம் ஆண்டு முதல் கடந்த 2025 வரை கட்சியின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் முன்னின்று நடத்தியுள்ளேன்.18 முறை சிறைவாசம், ஒரு முறை குண்டர் சட்டம் என என் வாழ்க்கையையே கட்சிக்காக அர்ப்பணித்தேன்.

21 இட ஒதுக்கீடு தியாகிகளில் ஒருவரான குப்புசாமியின் குடும்பத்திற்கு எனது சொந்தச் செலவில் ரூ.18 லட்சம் மதிப்பில் வீடு கட்டி, அதை அண்ணன் அன்புமணி கைகளாலேயே திறந்து வைக்கச் செய்தேன்".

அன்புமணி ராமதாஸ் இப்போது மாறிவிட்டார்:

அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட குடும்ப மற்றும் அரசியல் மோதல்களின் போது தான் அன்புமணியின் பக்கமே உறுதியாக நின்றேன். "அன்று இருந்த அன்புமணி வேறு, இன்று இருக்கும் அன்புமணி வேறு.

ராமதாஸ் ஐயாவுடன் நான் இருந்த காரணத்திற்காக என்னை 'துரோகி', 'சாக்கடை' என்று அன்புமணி விமர்சிக்கிறார்" என அவர் ஆதங்கப்பட்டார். மேலும், தங்களை போன்ற உண்மையான உழைப்பாளிகளை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, தந்தை-மகன் இருவரும் தற்போது மீண்டும் இணைந்து நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டினார்.

பாமக-வின் வாக்கு வங்கி வீழ்ச்சி:

கட்சியின் தற்போதைய நிலைக்கு அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோரின் தவறான முடிவுகளே காரணம் என்று அருள் சாடினார். "முன்பு 5.86% ஆக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கி, கடந்த ஓராண்டு காலத்தில் இவர்களது செயல்பாடுகளால் வெறும் 2.18% ஆகக் குறைந்துள்ளது" என புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார்.

'அன்புமணியை இனி தலைவராக ஏற்க முடியாது'

எனக்கும் அண்ணன் அன்புமணிக்கும் என்ன பிரச்சனை? எதுவுமே இல்லையே. ஒரே பிரச்சனை உங்களோடு இருந்தது ஒன்றுதான் பிரச்சனை. "இனிமேலும் அன்புமணி ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. வன்னிய சமுதாயத்தை தங்களது சொந்த நலனுக்காகச் சுரண்டி வாழும் அந்தக் குடும்பத்திற்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை" என ஆவேசமாக பேசினார்.

இரண்டாக உடைந்த பாமக:

அருள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் எம்பி சதாசிவம் பேசுகையில், "இந்தத் தேதியில் பாமாக்கா இரண்டாக உடைந்தது, ஒரிஜினல் பாமாக்கா இங்கேதான் இருக்கிறது" என்றார்.

புதிய கட்சி தொடங்குவதா அல்லது வேறொரு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து, கூட்டத்தில் பங்கேற்ற 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் பெறப்பட்ட கருத்துக்கணிப்புச் சீட்டுகளை ஆய்வு செய்து, ஆடி மாதம் முடிந்த பிறகு (ஆவணி மாதத்தில்) தங்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு மற்றும் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அருள் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com